தபால்மூல வாக்களிப்பு ஆரம்பம்! ரணிலுக்கு கிடைத்துள்ள நற்செய்தி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ளதுடன், அது தொடர்பான நற் செய்திகள் கிடைத்து வருவதாகக் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்திற்காக தமது வாக்குகளைப் பயன்படுத்திய அனைத்து அரச உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நல்ல செய்தி கிடைத்துள்ளது...
இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற முடியாது எனவும், அவரின் முட்டாள்தனமான செயற்பாடுகள் அநுரவிற்கு ஆதரவாக அமையும் எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டைப் பாதுகாக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொறுப்பை நிறைவேற்றி நாட்டுக்காக ஒன்றிணைந்து செயற்படுமாறு அனைத்து ஐ.தே.க உறுப்பினர்களுக்கும் இதன்போது அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், தபால் வாக்களிப்புக்கள் ஆரம்பித்துள்ளன. நல்ல செய்தி கிடைத்திருக்கிறது. இரு வருடங்களுக்கு முன்பாக இப்படியொரு தேர்தலை நடத்தும் வாய்ப்பு இருக்கவில்லை.
சிலர் நாடாளுமன்றத்தை முடக்க வந்தனர். அதற்கு சந்தர்ப்பம் அளிக்காமல் அவர்களை வெறும் கையோடு திருப்பி அனுப்பினோம் என குறிப்பிட்டுள்ளார்.
You may like this,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri
