பெருகும் ரணிலுக்கான ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்கும் தரப்பினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
இந்தநிலையில், நான்கு பிரதான போக்குவரத்துச் சங்கங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.
ரணிலுக்கு ஆதரவு
இதன்படி, அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம், தேசிய Taxi App முச்சக்கரவண்டி நிபுணத்துவ சங்கம், ஐக்கிய பயணிகள் போக்குவரத்து சேவை நிபுணர்கள் சங்கம், மேல் மாகாண முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கம் என்பன தற்போதைய ஜனாதிபதிக்கு தமது ஆதரவை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுடனான இன்றைய (04) சந்திப்பின்போதே தங்களது ஆதரவை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
பொருளாதார நெருக்கடியை அடுத்து கடனில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துவதை மறுசீரமைக்க அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் சந்தர்ப்பம் வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
You may like this,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri