ஐ.தே.க. அழிந்துவிடும்! ரணிலை எச்சரிக்கும் மகிந்த
பிரதான தேர்தல்களைப் பிற்போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முற்பட்டால் அதுவே அக்கட்சிக்கு இறுதிப் பயணமாக அமைந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
வேட்பாளர் பெயர் விரைவில்
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலும், அதன்பின்னர் நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்பட வேண்டும்.
இரு தேர்தல்களையும் பிற்போட முடியாது. அவ்வாறானதொரு முட்டாள்தனமான முயற்சியில் ஐக்கிய தேசியக் கட்சி இறங்காது என்றே நம்புகின்றேன்.
அவ்வாறு இறங்கினால் அதுவே அக்கட்சியின் இறுதிப் பயணமாக அமையும். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீதே மக்களுக்கு நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
