அமெரிக்காவுக்கு அருகில் ரஷ்ய போர்க்கப்பல்களை நிலைநிறுத்திய புடின்
ரஷ்ய ஜனாதிபதி புடின், அமெரிக்காவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தனது போர்க்கப்பல்களை அமெரிக்காவுக்கு சற்று தொலைவிலுள்ள கடல் பகுதியில் கொண்டு நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலுள்ள இடைவெளி 90 மைல்கள் என்ற நிலையில் ரஷ்யாவுக்கு சொந்தமான நான்கு போர்க்கப்பல்கள், நேற்று, 12 கியூபாவின் தலைநகரான ஹவானாவின் அருகே நிறுத்தப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று, அணு ஆயுதம் சுமந்து செல்லும் நீர்மூழ்கிக்கப்பல் என தெரிவிக்கப்படுகிறது.
தவிர்க்கப்பட்ட ஆயுதப்போர்
இவ்வாறு ரஷ்ய கப்பல்கள் அமெரிக்காவுக்கு அருகே கொண்டு நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் போர் வெடிக்கலாம் என உலக நாடுகளுக்கு பதற்றம் ஏற்பட, அமெரிக்காவோ, அந்தக் கப்பல்களால் அமெரிக்காவுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறியுள்ளது.
1962ஆம் ஆண்டு, இதேபோல ரஷ்யா, கியூபாவில் ஏவுகணைத் தளங்களை உருவாக்க, இந்த தகவல் அமெரிக்காவை எட்ட, இரு நாடுகளுக்குமிடையில் உருவாக இருந்த ஒரு பெரும் அணு ஆயுதப் போர், ஒப்பந்தம் ஒன்றின் மூலமாக தவிர்க்கப்பட்டது.
அந்த விடயம் வரலாற்றில் பெரும் பதற்றத்தை உருவாக்கிய நிலையில், தற்போது மீண்டும் அதே கியூபாவில் ரஷ்யா போர்க்கப்பல்களைக் கொண்டு நிறுத்தியுள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |