இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் ஹிஸ்புல்லா தளபதி பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில், ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுதக்குழு தளபதி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக்குழு ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பானது, அவ்வப்போது இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
விமானப்படை தாக்குதல்
இந்த நிலையில், லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டினை குறிவைத்து விமானப்படை தாக்குதல் நடத்தியது.
குறித்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் 4 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்களில் தளபதி தாலிப் அப்துல்லாவும் ஒருவர். இதனைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா நடத்திய பதிலடி தாக்குதலில், இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளதால், இருதரப்புகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |