ஜனாதிபதி வேட்பாளர் பசில் இல்லை! நாமலுக்கு தகுதி இல்லை
கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகைமையற்றவர் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பசில் தேர்தலில் போட்டியிடமாட்டார்
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராகவோ அல்லது பொதுவேட்பாளராகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களமிறக்கப்பட வேண்டும் என்பதை பொதுஜன பெரமுனவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

பலவீனமான வேட்பாளரை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுன களமிறக்கினால் கட்சியில் இருந்து விலகி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவேன்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை உள்ளவர் ஒருவர் பொதுஜன பெரமுனவில் தற்போது இல்லை. கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு தகைமையற்றவர். இதனை நான் அவரிடமே குறிப்பிட்டுள்ளேன் என குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam