அனைத்து வேட்பாளர்களுக்கும் ரணில் விடுத்துள்ள அறிவிப்பு
வேட்பாளர்கள் அனைவரும் வாக்காளர்களுக்கு உண்மையைக் கூற வேண்டும் என .ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி
மேலும் கூறுகையில்,'' நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் நாட்டைக் அந்த நிலையில் இருந்து காப்பாற்றி திறமையை நிரூபித்ததன் காரணமாக எனக்கு யாருடனும் போட்டி இல்லை.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வது குறித்து தான் கவனம் செலுத்தியுள்ளேன்.
ஊழல் குற்றச்சாட்டு
சிலரினால் ஊழலைப் பற்றிப் பேச மட்டுமே முடியும். ஊழல் குற்றச்சாட்டுள்ள எவரையும் தாம் ஒருபோதும் பாதுகாக்கவில்லை.
[IMD2UL[
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனோ அல்லது கடன் வழங்குநர்களுடனோ செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எந்த அளவுகோலையும் மாற்ற முடியாது.
அவ்வாறு செய்தால் இலங்கைக்குக் கிடைக்கும் நிதியை இழக்க நேரிடும்.'' என ஜனாதிபதி ரணில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam