14 மாதங்களில் 18 தடவை வெளிநாடுகளுக்கு பறந்த ரணில் : பெருந்தொகை மக்கள் பணம் விரயம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 12 நாள் விஜயம் மேற்கொண்டு சுவிட்ஸர்லாந்து சென்றுள்ளார்.
சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று இலங்கையில் இருந்து சென்றுள்ளார்.
எனினும் ரணில் விக்ரமசிங்க 14 மாதங்களில் 18 தடவைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
வெளிநாட்டு பயணம்
வெளிநாட்டு பயணங்களுக்கு ஜனாதிபதி 200 மில்லியன் ரூபாய் கேட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி வெளிநாடு செல்வது இது 18ஆவது தடவை என இது தொடர்பில் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரித்தானியாவுக்கு மூன்று முறையும், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் இரண்டு முறையும், சீனா, கியூபா, எகிப்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு தலா ஒரு முறையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.