தமிழர்கள் மாத்திரமே ரணிலுக்கு வாக்களிப்பார்கள்! மகிந்தவின் சகா சாடல்
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிப்பார்கள். அதுவும் எமக்கு சாதகமாகவே அமையும் என ராஜபக்ச ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,'' அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிப்பவர்கள் மாத்திரமே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்கள்.
2022 ஆம் ஆண்டு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
பொதுஜன பெரமுன
இந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுனவின் ஒத்துழைப்பை இந்த ஜனாதிபதி தேர்தலிலும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் அவர் செயற்பட்டார்.
நல்லாட்சி அரசாங்கத்தில் எவ்வாறு சுதந்திர கட்சியை பலப்படுத்தினாரோ, அவ்வாறு பொதுஜன பெரமுனவையும் பலவீனப்படுத்த முயற்சித்தார். நாங்கள் அதற்கு இடமளிக்கவில்லை.
இதற்கமைய பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளோம்.'' என்று கூறியுள்ளார்.