நாட்டு மக்களுக்கு காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் பல பிரதேசங்களில் கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை
இந்த அறிவிப்பு இன்று (28) அதிகாலை 3.00 மணிக்கு வெளியிடப்பட்டதுடன் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் உள்ள நெடுநாள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, காலி, நுவரெலியா மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்றின் வேகம் அதிகரிக்கும்
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது 50-55 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் அவ்வப்போது 30 - 40 கிலோ மீற்றர் வரை ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri