அதிகரிக்கும் போட்டி! ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் முன்னாள் இராணுவ தளபதி-செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் வேட்பாளராக போட்டியிட வாய்ப்புள்ளதாக முன்னாள் இராணுவ தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக தம்மை போட்டியிடுமாறு பலர் கோரியுள்ளனர்.
அதனடிப்படையில் தேவை ஏற்பட்டால் மற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி தாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுடன் வாழும் ஒரு அரசியல் கட்சி எனவும் மக்களின் கோரிக்கை தாம் ஜனாதிபதியாக பொறுப்பேற்பது என்றால் அதனை நிராகரிக்க வேண்டிய தேவை தமக்கு இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
