கடும் நெருக்கடியிலும் தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை
வறட்சியான காலநிலை நிலவுகின்ற போதிலும் தடையின்றி தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தொடர் மின்சாரத்தை வழங்குவதற்கு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஏற்கனவே செயலிழந்துள்ளது.

இலங்கை மின்சார சபை
இது தொடர்ச்சியான மின்சார விநியோகத்திற்கு தடையாக இருக்குமா என இலங்கை மின்சார சபையிடம் வினவப்பட்டுள்ளது.
தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமைக்குள் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நுரைச்சோலை
நுரைச்சோலை நிலக்கரி மின்நிலையத்தில் 03 மின் உற்பத்தி இயந்திரங்கள் உள்ளன, அவற்றில் ஒன்று தற்போது பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதற்கமைய, அந்த ஆலையில் தற்போது ஒரு ஜெனரேட்டர் மட்டுமே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
விஜய் ஆட்சி அமைப்பது குறித்து எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இயக்குனர் திருச்செல்வம் பரபரப்பு வீடியோ... இதோ Cineulagam