விகாரைகளுக்கு மின் கட்டணம் செலுத்த மறுக்கும் அஸ்கிரி பீடம்
மத ஸ்தலங்களின் மின்சாரக் கட்டணத்தை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கவில்லை என அஸ்கிரி பீடத்தின் பொதுச் செயலாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக சில விகாரைகளுக்கு மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
மின் கட்டணம்

மத ஸ்தலங்களில் சூரிய மின்சக்தி அமைப்புகளை நிறுவுதல் போன்ற மாற்று நடவடிக்கைகள் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டிய அவசியம் உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இருந்த போதிலும் அவ்வாறான வேலைத்திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மெதகம தம்மானந்த தேரர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய சூழ்நிலையில் ஆலயங்கள் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடற்கொள்ளையில் ஈடுபடும் ட்ரம்ப் நிர்வாகம்... எண்ணெய் கப்பல் விவகாரத்தில் ரஷ்யா கடும் தாக்கு News Lankasri
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri