மஹிந்தவை விரட்ட தயார் நிலையில் காத்திருக்கும் சிங்கள மக்கள்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் குருணாகலில் அடுத்தக்கட்ட அரசியல் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் குருணாகலில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த தகவலையடுத்து அந்தப் பகுதி மக்கள் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மஹிந்தவுக்கு எதிர்ப்பு வெளியிட்டு அவரது பயணத்தை தடுக்க பாரிய அளவிலான மக்கள் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் சித்தாந்தம்
தற்போது மக்கள் தெளிவாகியுள்ளதாகவும், அரசியல் சித்தாந்தங்களுக்கு அடிபணியாமல் மக்கள் சிந்தித்து செயற்படுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
தங்கள் பெறுமதியான வாக்குகளை கொள்ளை கும்பலுக்கு செல்ல இனிமேல் அனுமதிக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே குருணாகல் மக்கள் முட்டாள்தனமாக செயற்பட்டு மஹிந்த குழுவினரை அதிக வாக்குகளில் வெற்றியளிக்க செய்துவிட்டனர். இனிமேல் அவ்வாறான தவறு ஒன்று நடக்காதென மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மஹிந்தவை விரட்ட தயாராகும் மக்கள்
குருணாகல் ஒரு பெரிய மாவட்டம். நிறைய பேர் இருக்கிறார்கள். மஹிந்தவை தேடி வருபவர்கள் 100 பேராக தான் இரு்ககும் என்பதால் மக்கள் மீது குறை கூற வேண்டாம் என மற்றுமொருவர் மஹிந்தவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, நேற்று நாவலபிட்டியில் மக்களால் துரத்தியடிக்கப்பட்ட சம்பவம் வேறும் முன்னோட்டம் தான் எனவும் குருணாகல் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மஹிந்த கும்பலை அங்கிருந்து வெளியேற்றுவார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.
