பரபரப்பாகும் தென்னிலங்கை அரசியல் - மீண்டும் சர்ச்சைக்குரியவர்கள்
சமகால அரசாங்கத்தில் மேலும் சிலர் அமைச்சரவை அமைச்சர்களாக இன்றைய தினம் பதவியேற்க உள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய, 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை அமைச்சர்கள்

பதவிப் பிரமாணம் செய்யவுள்ள அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதில் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட பலர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், பதவிப் பிரமாணம் செய்யும் நேரம் குறித்த தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்றின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட போதிலும் அவர்களில் சிலர் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை கூட்டம்

இதேவேளை, இந்த வாரத்திற்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் நாடாளுமன்ற குழு கூட்டமும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வார நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு மேலதிகமாக 21வது அரசியலமைப்பு திருத்தம் குறித்தும் இங்கு விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri