நாமலை ஏமாற்றிய தென்னிலங்கை அரசியல்வாதிகள் - அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (Sri Lanka Podujana Peramuna) கட்சியின் தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) நியமிக்கப்பட்டமை கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தங்காலையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தை இறுதி நேரத்தில் புறக்கணித்தவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மகிந்தவின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) ஆகியோரும் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல்
கடந்த 29ஆம் திகதி இரவு, அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டோம் என ஊடகங்களுக்கு தெரிவித்தனர். முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என தெரிவித்துள்ளனர்.

அதனை பகிரங்கமாக அறிவிக்காத பொதுக் கூட்டங்களில் அவர்கள் பங்கேற்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், சமகால ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) பொதுஜன பெரமுன கட்சியின் பொதுவேட்பாளராக முன்னிறுத்த முடியும் என அவர்கள் வலியுறுத்திள்ளனர்.
பொதுஜன பெரமுன கட்சி முழுமையாக நாமலின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணிலின் பக்கம் தாவியுள்ளமை ராஜபக்ச குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri