இலங்கை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு - சர்வதேச நாணய நிதியம் கைகொடுக்குமா..?
இந்தியா இலங்கைக்கு வழங்கிய கடன்களை மறுசீரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இரு நாடுகளினதும் உயர்மட்ட அதிகாரிகள் மட்டத்தில் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் உதவி
பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா கடனாக வழங்கியுள்ளது. இந்நிலையில் கடனை மறுசீரமைக்க சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியது.
இதேவேளை இந்தியா எதிர்வரும் இலங்கைக்கு உதவி வழங்காது என அண்மையில் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
எனினும் புதுடெல்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர், இது தொடர்பில் உயர்ஸ்தானிகராலயத்திற்கு உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.
இது தொடர்பாக இந்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றும் அவர் கூறினார்.