இனத்துவேசவாதியான கம்மன்பிலவின் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியோம்! கஜேந்திரன் சூளுரை
இனத்துவேசவாதியான உதய கம்மன்பில தலைமையிலான குழுவினரின் அச்சுறுத்தல்களுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,"எமது கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியின் கொழும்பு வீடட்டைச் சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டங்களை நடத்தி அவரை அச்சுறுத்தி மௌனமாக்கவே சிங்களப் பேரினவாதம் முயற்சிக்கின்றது.
கஜேந்திரகுமார் எம்.பி. மீது இனத்துவேசவாதியான உதய கம்மன்பில முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களானவை உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்.
கஜேந்திரகுமார் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல்
கஜேந்திரகுமார் எம்.பிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து கொழும்பிலிருந்து அவரை வெளியேற்றும் நோக்குடனேயே உதய கம்மன்பில தலைமையிலான குழு செயற்படுகின்றது.
இந்த குழுவினரின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணிய போவதில்லை.
தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கில் பௌத்தமயமாக்கல் மற்றும் சிங்கள மயமாக்கலுக்கு எதிரான எமது ஜனநாயக போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்."என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
