கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டின் முன்பாக மீண்டும் பதற்றநிலை(Video)
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான குழுவொன்றே கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் வீட்டுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு உதய கம்மன்பில தலைமையில் சென்ற சுமார் 150 பேர் வரையிலான குழுவினரை பொலிஸார் வழிமறித்துள்ளனர்.
இதேவேளை சிங்கள பௌத்த பேரினவாதிகளால் இன்றைய தினமும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பு இல்லத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கை
தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
பெரும் பதற்றநிலை இன்றைய தினமும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களது கொழும்பு இல்லத்தின் முன்பாக சிங்கள பௌத்த பேரினவாதிகள் ஆர்ப்பாட்டம்.@GGPonnambalam@skajendren
— Selvarajah Kajendren MP (@skajendren) August 26, 2023
photo credit @Meerasrini pic.twitter.com/UXNpPFD9M8
அந்த பகுதியில் பெருமளவு இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நேற்றைய தினமும்(25.08.2023) கஜேந்திரகுமாரின் இல்லத்தின் முன்பாக சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் சீலரத்ன தேரர் உள்ளிட்ட இருவர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



