உலகில் மிகவும் பலம் வாய்ந்த தலைவராக மாறியுள்ள ரணில்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலக அரங்கில் உரையாற்றும் போது அவருக்கு மேலாக உரையாற்றுவதற்கு உலகில் யாரும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பரந்துபட்டவர்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ரணில் விக்ரமசிங்க என்பவர் 55 வருடங்கள் அரசியல் அனுபவம் வாய்ந்த உலகில் இருக்கின்ற மிகவும் பலம் வாய்ந்த ஒரு அரசியல் தலைவர்.
அமெரிக்கா மிகப்பெரிய நாடாக இருக்கலாம், இங்கிலாந்து பெரிய நாடாக இருக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் விட ரணில் விக்ரமசிங்க பரந்துபட்டவர். பலமானவர்.
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடியான நேரத்தில், தமக்கு ஒரு தலைவர் வேண்டும் என மக்கள் தேடினர். ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பெடுத்தால் நன்றாக இருக்கும் என்று மக்களும் கருதினர்.
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு அழைப்பு விடுத்தார். எமது தலைவர் அந்த அழைப்பை ஏற்றார். அவ்வளவுதான். ஏனைய தலைவர்கள் அதனை நிராகரித்தனர். பின்னர் ரணில் ராஜபக்ச என்று விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர். உண்மையில் சஜித், டலஸ், ராஜபக்சவும் களத்தில் இருந்தனர். ஆனால் ரணில் ராஜபக்ச வெற்றிப் பெற்றார்.
நாடாளுமன்றத்தில், ரணிலின் தனி ஆசனத்திற்கு 134 வாக்குகள் கிடைத்தன என்பதை மறக்கக் கூடாது. வெளிப்படையாகவும், வெளிப்படையற்ற வகையிலும் ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தில் பாரிய ஆதரவு காணப்படுகின்றது. அதனால் தான் ஜனாதிபதியால் நாட்டை நிர்வகித்து கொண்டு செல்லமுடிகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
