அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ரணில் விடுத்துள்ள அவசர அழைப்பு
அமைச்சரவையின் விசேட கூட்டம் நாளை (29.06.2023) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் கடன் மறுசீரமைப்பு திட்டம் அமைச்சரவையின் விசேட கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
விசேட குழு கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் விசேட குழு கூட்டம் அங்கு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்றக் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (28.06.2023) நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் கூட்டம் நடைபெறும் என நாடாளுமன்றத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
உள்ளுர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பிரேரணைகளுக்கு நாடாளுமன்ற அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தை கூட்டுவது குறித்து கட்சித் தலைவர் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
