ரணிலிடம் பெரும்பான்மை! புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி

Ranil Wickremesinghe Sri Lankan protests Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Anti-Govt Protest
By Sivaa Mayuri Jul 11, 2022 06:39 AM GMT
Report

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என்று சபாநாயகர் சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

அதனை இன்று அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரணிலிடம் பெரும்பான்மை

ரணிலிடம் பெரும்பான்மை! புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி | Sri Lanka Political Crisis Ranil Is The President

நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், ஜனாதிபதி பதவியை ஏற்குமாறும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளனர்.

இது நடக்குமானால் இதுவரை காலமும் ஜனாதிபதி பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும். எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், ஜனாதிபதி பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர்தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்தநிலையில் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டளஸ் அலகப்பெரும நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி 

ரணிலிடம் பெரும்பான்மை! புதன்கிழமை பதவியேற்கும் தற்காலிக ஜனாதிபதி | Sri Lanka Political Crisis Ranil Is The President

எனினும், நேற்று மாலை வரை, சஜித் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை. ரணில் விக்ரமசிங்க பதவியில் தொடர்ந்தால், ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்பார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார்.

விக்கிரமசிங்கவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது, ஆனால் அவர் பொருத்தமான வேட்பாளரை பரிந்துரைக்க நாடாளுமன்றின் உதவியை அவர் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக தற்காலிகமாக புதன்கிழமை பதவியேற்பார், இதன் போது நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் - பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரதமர், இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி மாநாடு மூலம் அமைச்சரவை கூட்டத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது.

அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் எதுவும் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள், தங்கள் பொறுப்புக்களில் நீடிப்பார்கள் என்று தெரியவருகிறது.

முன்னதாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தம்மிக்க பெரேரா மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர். எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US