எங்களைக் காப்பாற்றுங்கள்! கண்ணீர் வடிக்கும் முன்னாள் அமைச்சர்கள்
தங்களைக் கைவிடாமல் காப்பாற்றுமாறு முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் கதறியழத் தொடங்கியுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலின் போது 14 ஆயிரம் கரம் பலகைகள் மற்றும் 11 ஆயிரம் டாம் விளையாட்டுப் பலகைகள் என்பவற்றைக் கொள்வனவு செய்து முறைகேடான வழியில் விநியோகித்த குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை
நளின் பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகளும், மஹிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மஹிந்தானந்தவின் மைத்துனரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான அனுராத ஜயரத்தன உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் மஹிந்தானந்த மற்றும் நளின் பெர்னாண்டோவை பார்வையிட சிறைச்சாலைக்கு சென்றிருந்த சமயம், அவர்கள் இருவரும் அழுதுபுலம்பியுள்ளனர்.
தங்களைக் கைவிடாமல் காப்பாற்றி வெளியில் எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் கண்ணீர் வடித்து கதறியழுதுள்ளனர்.



