எமது ஒத்துழைப்புடனே ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்! மகிந்த வெளியிட்ட பகிரங்க தகவல்
நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது. அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் ஸ்ரீ மகா விகாரை மற்றும் ருவன்வெளிசாய ஆகிய விகாரைகளில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சு பதவிகள் இல்லாத காரணத்தால் ஆளும் தரப்பின் ஒருதரப்பினர் அதிருப்தியடைந்திருப்பார்களாயின் அதுவும் நன்மைக்கே என கூறியுள்ளார்.
ஜனாதிபதி தெரிவு

இதேவேளை உங்களின் ஒத்துழைப்புடன் தான் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார்,இணக்கமான தன்மை உள்ளதா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எமது ஒத்துழைப்புடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்,அவ்வளவு தான் என பதிலளித்துள்ளார்.
மேலும் நாடு தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதை அவதானிக்க முடிகிறது.பொருளாதாரத்தில் முன்னேற்றத்தன்மை காணப்படுகிறது.அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம்.
இந்நிலையில் ஒலி மற்றும் ஒளிப்பரப்பு அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் கூறுகையில், அனுமதிபத்திரம் இரத்து செய்யப்படாத வகையில் ஊடகங்கள் பாதுகாக்காக செயற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மயில் செய்த வேலையால் மொத்தமாக ஜெயில் அனுப்பப்பட்ட பாண்டியன் குடும்பம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
சுவிட்சர்லாந்தில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டவர்கள் பாதிப்பு News Lankasri