கோட்டாபயவை தினமும் சந்திக்கும் அமைச்சர்கள்: ஏற்படவுள்ள அரசியல் மாற்றம்-செய்திகளின் தொகுப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் தினமும் முன்னாள் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்து வருகின்றனர்.
கோட்டபாய ராஜபக்ச அரசியலில் இருந்து ஒதுங்க முயற்சித்த போதிலும் அவரை மீண்டும்
அரசியலில் ஈடுபடுத்துவதே இவர்களின் நோக்கமாக உள்ளதாகவும் அறியமுடிகிறது.
இதன் காரணமாக முன்னாள் ஜனாதிபதியின் நாட்குறிப்பு கூட சில நாட்களில் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஈடுபடுவது
குறித்து இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஸ்ரீ
லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்
தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள கட்சி மாநாட்டின் போது முக்கிய பல தீர்மானங்கள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
