ரணிலின் உரை தேர்தல் நாடகமே! எதிரணிகள் சாடல்
இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டது என்ற அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் நாடகம் என்று எதிரணிகள் சாடியுள்ளன.
ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு இன்று (26) ஆற்றவுள்ள உரையில் இந்த அறிவிப்பை விடுப்பார் என்று ஆளுங்கட்சி தகவல் வெளியிட்டுள்ள நிலையிலே எதிரணிகள் இவ்வாறு சாடியுள்ளன.
ஜனாதிபதியின் அறிவிப்பு
களனி ஆற்றிலிருந்து நாகம் வருகின்றதெனக்கூறி கோட்டாபய ராஜபக்ச வாக்குவேட்டை நடத்திய நாடகத்தின் 2 ஆம் பாகமாகவே ஜனாதிபதியின் அறிவிப்பு அமையும் எனவும் எதிரணிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் , "ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசி பெற்ற பின்னர், நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது எனவும் கூறவுள்ளார். ஆனால் நாடு மீண்டுவிட்டது என்ற அறிவிப்பை அவர் இதற்கு முன்னரும் விடுத்திருந்தார். எனவே,தேர்தல் நாடகமாகவே இது அரங்கேற்றப்படவுள்ளது.
தேர்தல் நாடகம்
களனி ஆற்றில் நாகம் வந்தது என நாடகமாடி கோட்டாபய ராஜபக்ச வாக்கு திரட்டினார், தற்போது வங்குரோத்து நிலையில் இருந்து நாடு மீண்டுவிட்டது எனக் கூறி பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து விழா எடுத்து வாக்கு திரட்ட ஜனாதிபதி தயாராகின்றார்.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது எனக் கடன் வழங்கும் நிறுவனங்கள் பட்டியலிடவில்லை. எனவே, இந்த கண்துடைப்பு நாடகத்தை மக்கள் நம்பக்கூடாது." என கூறியுள்ளார்.
அதேவேளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்களே இது தொடர்பான அறிவிப்பை விடுக்க வேண்டும் என்றும், மாறாக ஜனாதிபதி விடுப்பதில் பயன் இல்லை என்றும் தேசிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam
