தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஜே.வி.பி கற்றுக்கொடுத்தது என்ன! முன்னாள் அமைச்சர் தகவல்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.) கற்றுக் கொடுத்தது என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்த்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு
அவர் மேலும் குறிப்பிடுகையில்,''தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே கற்றுக் கொடுத்தது எனவே தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த இயலுமைய இந்த அரசாங்கத்துக்கே காணப்படுகின்றது.
1984, 1985களில் ஜே.வி.பி.யிலிருந்து கொண்டு அதன் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்காதவர்கள் அந்தக் கட்சினராலேயே கொல்லப்பட்டனர். எனவே தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் துப்பாச்சூடுகள், வாள் வெட்டுக்களை கட்டுப்படுத்தக் கூடிய இயலுமையும், அனுபவமும் ஜே.வி.பி.க்கு காணப்படுகிறது.
தற்போதுள்ள அரசாங்கம் அதற்கு மிகப் பொறுத்தமானதாகும். எனவே இந்த கொலை, கொள்ளை கலாசாரத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல்
நாட்டு மற்றும் மக்கள் மீதான அன்பின் அடிப்படையிலேயே அரசியலில் ஈடுபட வேண்டும். அதனை விடுத்து தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல.
நான் அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கான காலம் வந்துவிட்டது. எனவே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் என்ன நடக்கும் என்பதை பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.
மேலும் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகுமளவுக்கு ஒன்றும் இடம்பெறவில்லை. அவர் தலைமறைவாகாமல் இருந்திருந்தால் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணையில் விடுதலையாகியிருக்கலாம். எவ்வாறிருப்பினும் அவர் ஓரிரு தினங்களில் வெளியே வருவார். அவர் இந்தளவுக்கு அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை.''என கூறியுள்ளார்.

விஜய் டிவியில் இருந்து பிரியங்காவிற்கு கொடுக்கப்பட்ட பரிசு.. பதறிய தொகுப்பாளினி, அப்படி என்ன கொடுத்தாங்க? Cineulagam

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
