வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
நாட்டின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீற்றருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் இன்று (16) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடைக்கிடையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காற்று
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை ஏற்படும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்குதல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நான்கு நாட்கள் காத்திருந்து... 2,000 மீற்றர் தொலைவில் இருந்து சம்பவம் செய்த உக்ரைன் வீரர் News Lankasri

Optical illusion: சிறந்த கண்பார்வையை சோதிக்கலாம்...இதில் மறைந்திருக்கும் 4 இலக்கங்கள் என்ன? Manithan

என்னை அடித்து தங்கம் கடத்தியதாக ஒப்புக்கொள்ள வைத்தார்கள் - ரன்யா ராவ் பரபரபரப்பு குற்றச்சாட்டு News Lankasri
