ரணிலின் அரசியல் நாடகமே தேசிய பேரவை! - சாடுகின்றது ஜே.வி.பி.
சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்கான ரணில் விக்கிரமசிங்கவின் நாடகமே தேசிய பேரவையாகும். அரசியல் நோக்கம் கொண்ட அந்தப் பேரவை பயனற்றதாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
போராட்டக்காரர்கள் மீது தாக்குதல்

போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்படுகின்றனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. மறுபுறத்தில் தனக்குத் தேவையான அரசியல் மற்றும் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசு முன்னெடுத்து வருகின்றது.
இந்நிலையில், தேசிய பேரவை எதற்கு? பெயரளவில் மட்டுமே அது இருக்கப் போகின்றது. ரணில் விக்ரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. தற்போதைய அரசும் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. ஊழல், மோசடிகள் இடம்பெறுகின்றனர்.
எனவே, சர்வதேச மட்டத்தில் எழும் அழுத்தங்களை சமாளிப்பதற்காகவே ஆளுங்கட்சி
தேசிய பேரவையைப் பயன்படுத்த முயற்சிக்கின்றது என்றார்
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam