சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற நால்வர் கைது
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகளை கடத்திச்செல்ல முற்பட்ட நால்வர் வண்ணாத்துவில்லு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இக்கைது சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக தேக்கு மரக்குற்றிகள் 3 லொறிகளில் கடத்திச் செல்லப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமை வண்ணாத்திவில்லு நகரில் வைத்து லொறிகளை நிறுத்தி சோதனைகளை முன்னெடுத்துள்ளனர்.
10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெருமதி

இதன்போதே 10 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் வண்ணாத்திவில்லு பகுதியைச் சேர்ந்தவர்களென பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட மரக்குற்றிகள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட மூன்று லொறிகளையும் புத்தளம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வண்ணாத்திவில்லு பொலிஸார் தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக இதன்போது தெரிவித்தனர்.




ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
கருப்பு பட மாபெரும் வெற்றி, அடுத்த பட சம்பளத்தை உயர்த்தினாரா நடிகர் சூர்யா?... அதுவும் இத்தனை கோடியா? Cineulagam
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri