தகாத தொழிலில் ஈடுபடும் பெண்போல் மனைவியை நடிக்கச் செய்து கணவன் செய்த மோசமான செயல்: நால்வர் கைது
தகாத தொழில் மேற்கொள்வது போல் மனைவியை நடிக்கச் செய்து பல்வேறு நபர்களிடம் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கணவன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக எகொடஉயன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் ஆண்களை ஏமாற்றி, ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அழைத்துச் சென்ற பின் பெண்ணின் கணவர் உட்பட கும்பல் ஒன்று அவர்களின் தங்க நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகள் கொள்ளையிட்டு வந்துள்ளது.

நால்வர் கைது
இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் ஒருவரை விசாரணை செய்தபோது, கொள்ளையில் ஈடுபட்ட பெண், அவரது கணவர் நண்பர் மற்றும் நண்பரின் தாயார் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட பெறுமதியான பொருட்களை அடகு வைத்து பணத்தைப் பெறச் சென்றபோதே சந்தேகநபர் ஒருவரின் தாய் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மொரட்டுவை பொலிஸாருக்கும் ஏற்கனவே முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam
Bigg Boss: சட்டென பணப்பெட்டியை எடுத்த கானா வினோத்! ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கிய தருணம் Manithan