சில பிரதி பொலிஸ் மா அதிபர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்!
சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்களாக அண்மையில் நியமிக்கப்பட்டவர்கள் அநேகர் இலஞ்ச, ஊழல் செயற்பாடுகளுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களாவர் என சிவில் செயற்பாட்டாளர் கெலும் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார்.
நடவடிக்கை எடுக்கவில்லை.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,''தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கு சொந்தமாக அநுராதபுரத்தில் திசாவெவ குளத்திற்கு அண்மையில்,ஒரு அறையின் வாடகை ரூபா 35,000 அறவிடப்படும் ஹோட்டல் இருப்பதாக நாம் தெரிவித்தோம், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.
அது மட்டுமல்ல மேல் மாகாணத்தின் தென் பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ASSP காலத்தில் இருந்து செய்த ஊழல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
இவை நிரூபிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் இது தொடர்பில் விசாரணை நடத்துவது அதே பொலிஸார் என்றால் நிரூபிக்க வேறு வழியில்லை தானே. இவர் தனக்கு வழங்கப்பட்ட வேன் ஒன்றை தனது தனிப்பட்ட நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறார்.
மேலும் சேயா என்ற குழந்தையின் மரணத்தில் வாய் பேச முடியாத ஒருவரை பிடித்து விசாரித்து சம்பவத்தை திசைதிருப்ப முயன்றது மற்றும் அவிஸ்சாவலையில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தமை தொடர்பில் இவருக்கு குற்றச்சாட்டு இருப்பதை ஏன் விசாரிக்க முடியாது.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் மேலதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.''என தெரிவித்துள்ளார்.



