நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசியல்வாதிகள் உதவியதாக கனேமுல்ல சஞ்சீவ தெரிவிப்பு
நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அரசியல்வாதிகள் உதவியதாக பிரபல போதைப்பொருள் வர்த்தகரும், பாதாள உலகக் குழு தலைவருமான கனேமுல்ல சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளின் உதவியுடனே தாம் நாட்டை விட்டு தப்பி சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விமான நிலையத்தில் வைத்து கைது
கடந்த 13ஆம் திகதி போலி கடவுச்சீட்டு ஒன்றை பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டுக்கு வந்த போது அவர் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இதன் பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது அவர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தியா மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் தாம் தங்கி இருந்ததாகவும் அங்கு தங்கி இருப்பதற்கு சிரமங்கள் ஏற்பட்ட நிலையில் போலி கடவுச்சீட்டை தயாரித்து நாடு திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் தான் வெளிநாடுகளில் தங்கி இருக்க முடியாத சூழ்நிலை உருவானது எனவும் இதனால் நாடு திரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்தெந்த அரசியல்வாதிகள் உதவினர் என்பது பற்றிய விபரங்களை அவர் வெளியிடவில்லை என தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு திரையுலகினர் சார்பாக கொடுக்கப்பட்ட வீடு.. எவ்வளவு தெரியுமா? Cineulagam
