சேவையிலிருந்து விலகிச் செல்லும் பொலிஸார் குறித்து வெளியான தகவல்!
கடந்த இரண்டரை மாதகாலத்திற்குள் 260 பேர் பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பதவி விலகல் தொடர்பான முன் அறிவித்தல் வழங்காமலேயே அவர்கள் அனைவரும் சேவையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர்.
பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மற்றும் சார்ஜன்ட்கள் தர உத்தியோகஸ்தர்களே இவ்வாறு பெருமளவில் சேவையை விட்டு விலகிச் செல்வதாக பொலிஸ் தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
பொலிஸ் சேவை
இவர்களில் பலர் மன அழுத்தம், பொருளாதார பிரச்சினைகள், அதிக வேலை மற்றும் கடமையின் அழுத்தம், ஓய்வின்மை போன்ற காரணங்களால் பொலிஸ் சேவையை விட்டு விலகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் பொலிஸ் சேவையை விட்டு விலக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
2022ஆம் ஆண்டில் மாத்திரம் 900 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பொலிஸ் சேவையிலிருந்து விலகிச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
