ரணிலுக்கு ஆதரவாக களமிறங்கும் மொட்டுக் கட்சி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுக்கு ஆதரவளிக்க மொட்டுக் கட்சியில் பெரும்பாலானவர்கள் தயாராக இருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது, தற்போதைய நிலையில் கடந்த ஓராண்டுக்கு முன் நாட்டில் நிலவிய மக்களின் வரிசை யுகம் மறைந்துள்ளது.
ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கைகள்
எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றது.
நாட்டின் பொருளாதார நெருக்கடியும் படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாகவே நாட்டில் இன்று நெருக்கடிகள் அற்ற இயல்பு நிலை திரும்பியுள்ளது.
அவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க களம் இறங்கும் பட்சத்தில் மொட்டுக் கட்சியின் ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளிக்கத் தயாராக இருக்கின்றனர் என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 7 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
