இன்று பொதுஜன பெரமுன என்ற கட்சி இல்லை! புத்திக்கப்பத்திரண
இன்று பார்க்கும் போது பொதுஜன பெரமுன என்ற கட்சி இல்லை அந்த கட்சிகளில் இருக்கும் உறுப்பினர்கள் சிதறப்பட்ட நிலைகளில் இருக்கின்றார்கள் என எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களுடனான சந்திப்பு முள்ளியவளை பகுதியில் நடைபெற்றுள்ளது.
இதன்போது கருத்து தெரிவித்த புத்திக்க பத்திரண,
”வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்ய வந்துள்ளோம்.
இன்று பார்க்கும் போது பொதுஜன பெரமுன என்ற கட்சி இல்லை அந்த கட்சிகளில் இருக்கும் உறுப்பினர்கள் சிதறப்பட்ட நிலைகளில் இருக்கின்றார்கள்.
ஜக்கிய மக்கள் சக்தி உருவான ஜக்கிய தேசிய கட்சியும் அவ்வாறன நிலையில்தான் இருக்கின்றது.
ஒரே ஒரு நாடாளுமன்ற ஆசனத்தினை கைப்பற்றி பல வழிகளில் சென்று ஜனாதிபதி ஆசனத்தினை கைப்பற்றினாலும் மக்கள் மத்தியில் ஜக்கியதேசிய கட்சி என்ற ஒரு கட்சி இல்லை.
வடக்கில் பருத்தித்துறை தொடக்கம் தெற்கு தெய்வேந்திரமுனைவரைக்கும் கொழும்பு தொடக்கம் மட்டக்களப்பு வரை ஜக்கிய மக்கள் சக்தியின் பெயர்தான் ஒலித்துக்கொண்டிருக்கின்றது.
அது மாட்டுமல்ல இலங்கையில் இருந்து வெளிநாடுகளில் வாழ்கின்றவர்களிடமும் கட்சி கட்மைப்பினை வலுப்படுத்தியுள்ளோம்” என்றார்.
இந்த சந்திப்பின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண மற்றும் ஜக்கிய மக்கள் சக்தியின் ஊடக பேச்சாளர் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் வவுனியா முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 3 நாட்கள் முன்

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
