மொட்டுக் கட்சிக்குள் நாமலுக்கு ஏற்பட்டுள்ள கடும் எதிர்ப்பு- செய்திகளின் தொகுப்பு
நாமல் ராஜபக்சவுக்கு எதிராக அரசியல் ரீதியாக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரோஹித அபேகுணவர்தன ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டதற்கு அரசாங்கத்துக்குள் எதிர்ப்பு எழுந்துள்ளது.
பொதுஜன பெரமுன கட்சிக்குள் இருந்தே எதிர்ப்பு வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகியுள்ளது.
மக்களின் கோபத்திற்குள்ளான நபர்களின் திருப்திக்காக மீண்டும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளது.
இந்த செயற்பாடு மீண்டும் மக்களின் கோபத்தை தூண்டி பேரழிவை ஏற்படுத்தலாம் என இந்த அமைச்சுப் பதவிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு.
தனது மகள் தாராவை வைத்து அடுத்த பிளான் போட்ட கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய புரொமோ Cineulagam
Bigg Boss: பேபின்னு சொன்ன வாயை உடைச்சிடுவேன்... இருக்கையை எட்டி உதைத்த கம்ருதின்! பாருவின் காதல் முறிவு Manithan