EPF-ETF குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(04.10.2023) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் முன்மொழிவுகளுக்கு இடமளிக்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகளுடன் விவாதம்
EPF மற்றும் ETF நிதிகளை வெளிநாட்டில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும் இந்த விடயம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
EPF தற்போது மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது, அதேநேரத்தில் ETF தொழில் திணைக்களத்தினால் கையாளப்படுகிறது என்று அவர் கூறினார்.
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri