டலஸை கைவிட்ட சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்! இறுதி நேரத்தில் நிகழ்ந்த மாற்றம்
ஜனாதிபதித் தெரிவில் டலஸ் அழகப்பெருமவுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களிக்கவில்லை என சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான இன்றைய வாக்கெடுப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எமது கட்சியின் பலர் டலஸூக்கு வாக்களிக்வில்லை!
நாடாளுமன்ற உறுப்பினர் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது. எனினும் இறுதி நேரத்தில் சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் டலஸூக்கு வாக்களிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தீர்மானிக்க மத்திய குழுவிற்குள் கலந்துரையாடல் நடத்தப்படும்.
புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எந்த அமைச்சுப் பதவிகளையும் ஏற்காது, கட்சியின் வேலைத்திட்டத்தை நிறைவேற்றும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



