முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது! உதயகுமார் எம்.பி தெரிவிப்பு (Video)

Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis
By Thirumal Oct 03, 2022 06:13 AM GMT
Report

 கோட்டாபய ராஜபக்சவுக்கு வக்காலத்து வாங்கி, சிறிது காலம் தலைமறைவான மலையக அரசியல்வாதிகள் சிலர் மீண்டும் துள்ள ஆரம்பித்துள்ளனர். அவர்களின் முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது, பதவிக்கும், பணத்துக்கும் விலைபோகாத எங்கள் பின்னாலேயே மக்கள் அணிதிரள்வார்கள் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம். உதயகுமார் தெரிவித்தார்.

பத்தனை, தலவாக்கலை, லிந்துலை ஆகிய பிரதேசங்களில் உள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்ட கமிட்டி தலைவர்களுடான சந்திப்பு கூட்டம் தலவாக்கலை கதிரேசன் ஆலய மண்டபத்தில் நேற்று  (02.10.2022) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே உதயகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,


முகமூடி அரசியல் இனியும் மக்கள் மத்தியில் எடுபடாது! உதயகுமார் எம்.பி தெரிவிப்பு (Video) | Sri Lanka Parliament Member Uthayakumar Upcountry

" நாட்டிலே ஒரு புறம் விலை அதிகரிப்பு இடம்பெறுகின்றது, மறுபுறத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறுகின்றது. இதனால் மக்கள் பெரும்பாடு படுகன்றனர்.

மூவேளை உண்டு வாழ்ந்த மக்கள் உணவு வேளையை சுருக்கியுள்ளனர். மேலும் சிலர் உண்ணும் அளவை குறைத்துள்ளனர். சிலருக்கு உணவு உண்ண வழியில்லை.

பிள்ளைகளை பாடசாலைகளில் மயங்கி விழும் நிலையும் உள்ளது. தற்போதைய நிலைமை நீடித்தால் அடுத்து வரும் மாதங்களில் நிலைமை மோசமாகும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும் வாழ்க்கைச் சுமைக்கேற்ற ஊதியம் இல்லை. தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் பழைய சம்பளம்தான் வழங்கப்படுகின்றது.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும். அதற்காக நாம் போராடுவோம். தமிழ் முற்போக்கு கூட்டணியாக குரல் கொடுப்போம்.

மற்றையவர்களைபோல ஏமாற்று அரசியல் நடத்த மாட்டோம். மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதே எமது உயிர்மூச்சு. அதற்காக எல்லாவழிகளிலும் போராடுவோம். பணத்துக்கும், பதவிகளுக்கும் விலைபோக மாட்டோம். கொள்கை வழியில் பயணிப்போம் என்றார். 

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US