பொதுத்தேர்தலை இலக்கு வைக்கும் நாமல்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளுமென்றும், தேர்தலில் கட்சி பெரு வெற்றிபெறும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தலில் வெற்றியை நோக்கி கட்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் கொள்கையை மாற்றப் போவதில்லை
பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சியின் பொறுப்பை நீங்கள் ஏற்றுக் கொண்டுள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் எதிர்வரும் பொதுத் தேர்தலை பொதுஜன பெரமுன மிகுந்த பலத்துடன் எதிர்கொள்ளும். சந்தர்ப்பவாதத்துடன் செயற்பட்டு கட்சியின் கொள்கையை மாற்றப்போவதில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
உக்ரைன் தலைநகர் மேல் வெடித்த ரஷ்ய ஏவுகணைகள்- விண்வெளியிலிருந்து பதிவுசெய்யப்பட்ட காட்சி News Lankasri