வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் வந்த மர்ம பொதி - சிக்கிய யுவதி
வெளி நாட்டிலிருந்து விமானம் மூலம் அனுப்பப்பட்ட மர்ம பொதி தொடர்பில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி பிரதான தபால் நிலையத்தின் வெளிநாட்டு பொதி பிரிவுக்கு பொதியை பெற்றுக் கொள்ள வந்த யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
ஹபராதுவ தல்பே பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மற்றொரு நபர் அதை பெற தபால் நிலையத்திற்கு வந்தபோது, சந்தேகத்திற்குரிய பொருள் இருந்ததால் வெளிநாட்டு பொதி துறை ஊழியர்கள் அதை சோதனை செய்தனர்.
போதைப்பொருள் இருந்தமையால் இருவரும் தடுத்து வைக்கப்பட்டு சுங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சுங்கத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் அந்த பார்சலில் 1960 கிராம் குஷ் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து அதிகாரிகள் வந்து சந்தேக நபரை கைது செய்தனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 14 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
