இலங்கை - பாகிஸ்தானிய உயர் இராணுவ அதிகாரிகளின் சந்திப்பு
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஆமர் ராசா, இலங்கையின் இராணுவ தளபதியுடன் உயர்மட்டக் கலந்துரையாடலை நடத்தியுள்ளார்.
இலங்கையின் இராணுவத் தலைமையகத்தில் இந்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு விடயங்கள் குறித்து கருத்து பகிர்வு
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவுக்கும் பாகிஸ்தானிய தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சையத் ஆமர் ராசாவும், இதன்போது இரண்டு நாட்டு பாதுகாப்பு விடயங்கள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக கூட்டு இராணுவ பயிற்சித் திட்டங்கள், உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து அவர்கள் முக்கிய கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















