பிரியந்த குமார கொலை சம்பவத்தால் இலங்கை - பாக்கிஸ்தான் உறவில் பாதிப்பில்லை
பிரியந்த குமார கொலை சம்பவத்தால் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண (Ramesh Pathirana) தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தானில் இலங்கை பிரஜை ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டமையால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தால் பாக்கிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) உறுதியளித்துள்ளார்.
அத்தோடு சுமார் 130 சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! | 
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        