மோசமாக சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை!
உலகில் மிகமோசமாக சீர்குலைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹங்க் உலகின் 157 நாடுகளை உள்ளடக்கி வௌியிட்டுள்ள குறித்த பட்டியலில் இலங்கையானது 11வது இடத்தில் உள்ளது.
15 நாடுகளின் பட்டியல்
வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், வர்த்தக நாணய மாற்று வீதம், வருடாந்த தனிநபர் உற்பத்தி வீதம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றது.
இந்த பட்டியலில் முதலிடத்தில் சிம்பாப்வே உள்ளது. இலங்கை 11வது இடத்தில் உள்ளது.
சிம்பாப்வே, வெனிசியூலா, சிரியா, லெபனான், சூடான், ஆர்ஜண்டினா, யெமன், உக்ரைன், கியூபா, துருக்கி, இலங்கை, ஹைட்டி, அங்கோலா, டொங்கா, கானா ஆகிய நாடுகளே உலகின் மிக மோசமாக சீர்குலைந்த 15 நாடுகளின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |