க. பொ. த மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதி அறிவிப்பு
இவ்வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம், உயர் தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான உத்தியோகபூர்வ திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
உத்தியோகபூர்வ திகதிகள்
இதன்படி 2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, இந்த ஆண்டு மே மாதம் 6ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையில் நடத்தப்படவுள்ளது.
மேலும், இவ்வருடத்திற்கான 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.

அத்துடன், 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைகள், இந்த ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறும்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி பின்பு அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan