கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்திய தேசிய கொடியைத் தாங்கிய குழுவினர் : செய்திகளின் தொகுப்பு
தமிழர்களின் அறவழி தியாகியான திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியை நேற்று(17) திருகோணமலையில் வைத்து இடைமறித்த ஒரு குழுவினர் அதன் மீது மோசமான தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து நல்லூர் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த ஊர்திப் பவனி 03 ஆம் நாளாக நேற்று திருகோணமலை நோக்கி பயணித்த போது கப்பல்துறைமுக பகுதியில் வைத்து இலங்கையின் தேசியக்கொடியை தாங்கிய ஒரு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று முன்தினம்(16) இரவே இவ்வாறான ஒரு தாக்குதலுக்கு திட்டமிடப்பட்ட நிலையில், நேற்று பகல் நினைவு ஊர்தியை வழிமறித்த குழுவினர் அதன் மீது பொல்லுகள் மற்றும் தடிகளால் தாக்கி அதனை சேதப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னால் வந்த செயற்பாட்டாளர்களின் வாகனத்தையும் அவர்கள் ஆக்ரோசமாக தாக்க முயற்சித்துள்ளனர்.
இந்த தாக்குதலை இலங்கையின் உளவுத்துறையினரே திட்டமிட்டதாகவும், மயிரிழையில் தாம் உயிர் தப்பியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri
