விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு ரணில் வழங்கிய மன்னிப்பு! கொந்தளித்த நாமல் - செய்திகளின் தொகுப்பு
சிறையில் உள்ள விடுதலைப்புலிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கும் அதேநேரம் குற்றம் சுமத்தப்பட்டுள்ள போர் வீரர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர்மேலும் குறிப்பிடுகையில்,
விடுதலை புலிபயங்கரவாதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியதை நான் பார்த்தேன். குறிப்பாக, மத்திய வங்கி மீது குண்டுத் தாக்குதலில் 91 பேரைக் கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை காயப்படுத்திய விடுதலைப் புலி உறுப்பினருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியுள்ளார்.
அந்த புலிச் சந்தேக நபர்களுடன் நானும் மகசின் சிறைச்சாலையில் இருந்தேன்.
நான் விளக்கமறியலில் இருந்த நேரம் அது. 15, 20 வருடங்களாக விளக்கமறியலில் உள்ளவர்களை அதிபர் திட்டமிட்டு மன்னிப்பதாலோ அல்லது விடுதலை செய்வதாலோ பிரச்சினை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
