சிங்கள கட்சிகளை ஒன்றிணைக்கின்றார் ரணில் - செய்திகளின் தொகுப்பு
அனைத்துக் கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வருவதற்கு வசதியான வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய யாப்பை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அந்தக் கட்சியின் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்சியின் மாநாட்டை நடத்தி புதிய மாற்றங்களை மேற்கொள்ளுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நவீன உலகத்திற்கு பொருத்தமான வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பினை மாற்றுவதே கட்சியின் எதிர்பார்ப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எவருக்காவது நாடு வீழ்ச்சியுறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானால் அவர்கள் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியை வீழ்ச்சியுறச் செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஐக்கிய தேசியக் கட்சி வீழ்ச்சியுற்றதால் முழு நாடும் வீழ்ச்சியுற்றது.
எனினும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரே நாட்டுமக்களுக்காக துணிச்சலுடன் முன்வந்து மீண்டும் நாட்டை கட்டியெழுப்பினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam
