படையினருடன் புலிகளை ஒன்றிணைப்பது கோழைத்தனமானது! சரத் காட்டம் - செய்திகளின் தொகுப்பு
நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த படையினரையும், விடுதலைப் புலிகளையும் ஒன்றிணைத்து நினைவுகூரும் வகையில் தூபி அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை கோழைத்தனமானது.
அரசாங்கத்தின் தீர்மானத்தையிட்டு வெட்கமடைகிறேன். தீர்மானம் திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என ஆளும் தரப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
யுத்தத்தில் உயிரிழந்த அனைவரையும் நினைவுகூறும் வகையில் 'நினைவு தூபி'ஒன்றை ஸ்தாபிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.
இதனை நல்லிணக்கம் என்று குறிப்பிட கூடாது.கோழைத்தனமான செயற்பாடு என்றே குறிப்பிட வேண்டும். நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த முப்படையினரையும், விடுதலை புலிகள் அமைப்பினரையும் எவ்வாறு ஒருமித்து பார்க்க முடியும்.
நாட்டில் அரசியலமைப்பினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருமைப்பாட்டை பாதுகாக்கவே முப்படையினர் போராடினார்கள். விடுதலை புலிகள் அமைப்பினர் நாட்டு எதிராக செயற்பட்டார்கள்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
